திருச்சி சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின்
சார்பாக மாநில தலைவர்
சபரிநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது
ரிஜ்வான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்

மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கொரோனா காலத்தில் ஏற்பட்ட
ஆக்ஸிஜன் பற்றாக்குறை மீண்டும் பிற்காலத்தில் வராத வகையில்
மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும்
விதமாக முக்கிய சிக்னல்களில் குற்றம் மற்றும் போக்குவரத்து
காவல் துணை ஆணையர் முத்தரசு மற்றும் போக்குவரத்து
உதவி ஆணையர் முருகேசன் (தெற்கு சரகம்) போக்குவரத்து
உதவி ஆணையர் ஜோசப் நிக்சன் (வடக்கு சரகம்) மற்றும்
சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கம் சட்ட ஆலோசகர்
ராஜீவ்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளை நம்
சந்ததிகள் வாழ்வதற்கு மரங்களை வளர்த்து, மரங்களை பாதுகாக்க வேண்டும் என சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.