திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அவரின் மறைவுக்குப் பின் கழகத்தை காணாமல் போகச் செய்தனர் நினைத்தவர்களின் எண்ணத்தை தூளாக்கி மீண்டும் அதிமுகவை உலகம் புகழும் இயக்கமாகக்கி காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
தனது வாழ்வின் 34 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் நமது அம்மா.
எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருவரும் தலைவர்கள் மீதும் உயிரினும் மேலான அன்பு கொண்ட தொண்டர்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து அதிமுகவை காத்து காவல் தெய்வங்களாய் பணியாற்றி வருகின்றனர்.
அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கழகத்தில் புயல் வீசி அனைத்தும் தகர்ந்து விடும் என்று எண்ணி இருந்தவருக்கு ஏமாற்றத்தை அளித்து அம்மா அவர்கள் விட்டுச் சென்று ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்,இந்த சாதனையைக் கண்டு எதிரிகள் வியந்து நின்றனர்.
பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக சட்டமன்ற தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.
அனைத்து சூழ்ச்சிகள் தந்திரங்களையும் முறியடித்து மக்களின் அன்பைப் பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்றது பிரதான எதிர்க்கட்சியாக 66 சட்டமன்ற உறுப்பினர்களை தமிழ் நாட்டின் நலனுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உண்மை மக்கள் தொண்டர்களாக பணியாற்ற துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
உழைப்பை சுரண்டும் ஒற்றுமையாகவும் நட்பு அளிக்கும் நக்கலாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்டு சிலர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் என்ற வஞ்சக வலையை நாளும் கொண்டு இருக்கின்றனர்.
தேர்தலுக்கு முன்பு அரசில் இருந்து ஒதுங்கியிருக்க போவதாக அறிவித்த சசிகலா தற்போது கட்சி வலுவாகவும், பொலிவாகும், தொண்டர்கள் பெரும் படையும் பெற்று இருப்பதை பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதை ஊரறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அதிமுக மக்களின் வேகமாக வரலாற்றில் நிலைபெறு மே தவிர ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம்.
தொடர்ந்து சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சியின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்களாக இணை ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கண்ணின் மணியான கழகத்தை காப்போம் உள்ள மனம் நிறைந்து இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கண்ட கனவை நினைவாக்குவோம்.
எனக்குப் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கழக மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றும் என உளமாற உறுதி எற்கிறோம்.
என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட அவைத்தலைவர் பரணி வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ் தீர்மானத்தை வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, பகுதி,நகர,பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.