திருச்சியில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.
திருவரங்கம் கீரைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51)
இவர் டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று திருச்சி தேவதானம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த போது இவரை கெட்ட வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டு கத்தி முனையில் ஒரு வாலிபர் மிரட்டி பணத்தை பறித்து விட்டு ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பெயரில் கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிந்து திருச்சி கீழே தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி குணா என்பவரை கைது செய்தார்.
அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது,
இதேபோல் திருச்சி பாலக்கரை கீழப்புதூர் ரோட்டில் பெட்டி கடை முன்பு அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் பணத்தை அருவாள் முனையில் வழிப்பறி செய்ததாக மணிகண்டன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து அருவாள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.