திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது. இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி காந்தி மார்க்கெட் சூரஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்றதாக வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த தேவா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 25,000 ஆகும்.