தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது.
அந்த வகையில், கடந்த மாதம் 15ம் தேதி காந்தி மார்க்கெட்டை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கு அமலான பிறகும் காந்தி மார்க்கெட் இயங்கி வந்தது. மக்கள் அதிகளவு கூடியதாலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்ததாலும் மார்க்கெட்டை மூடும் படி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, மேலப்புலிவார்டு ரோடு காமராஜர் வளைவு முதல் வெல்லமண்டி சாலை சந்திப்பு வரை காய்கறிகள் விற்பனையும் கீழ்ப்புறத்தில் மொத்த வணிகமும் மேலபுறத்தில் சில்லரை வணிகமும் நடைபெற்றது.
இந்த நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் வரும் 20ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மொத்த வியாபாரமும்
காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சில்லறை வியாபாரமும் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும்
வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.