திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டு உள்ளனர்.
மேலும் இவர்களின் பிரதான கோரிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், நீதிமன்றத்தில் தண்டனை முடித்தவர்களை மீண்டும் சிறையில் அடைப்பது ஏன்?
அவர்களை விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்துடன் இணைக்க வேண்டியும் தண்டனை காலத்துக்கு அதிகமாக இங்க வைத்து தங்கள் மீது பொய்யான வழக்குகளை மேலும் மேலும் பதிவு செய்து கொண்டிருக்கும் காவல்துறையினரை கண்டித்தும்
ஈழத்தமிழர்கள் மீது ஒரு கால் புணர்ச்சி யோடு வஞ்சம் வைத்து பகையோடு, வழக்கிலேயே வாழ்க்கையாக நடத்தும் சூழ்நிலை தள்ளப்பட்ட தங்களை தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.