திருச்சி மாநகராட்சியில் 3000 தூய்மை பணியாளர்களுக்கு முட்டை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பணியாற்றும் 3000 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 30 முட்டைகள் வழங்கும் பணியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றும் 3000 தூய்மைப் பணியாளர்களுக்கு

ஊட்டச்சத்து பெறும் வகையில் தலா 30 முட்டைகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (10.06.2021) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், ந.தியாகராஜன்,
முதன்மைப் பொறியாளர் .அமுதவல்லி,செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன்,
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள், மார்க்கெட்டிங் சொசைட்டி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.