திருச்சி 45 வட்ட திமுக சார்பில் கருமண்டபத்தில் கொரோனா பேரிடர் கால நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டச்செயலாளர் பி.ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் கே என் நேரு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி, கீரை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ க்கள் சவுந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார்.
பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ் , கண்ணன் , காஜாமலை விஜய் , தொழிலதிபர் ஜான்சன் குமார், தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவர் தில்லை மெடிக்கல் மனோகரன், ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, விவசாய அணி மூக்கன், கவி அக்ரோ ஏஜென்சீஸ் ராஜன் பாபு, பந்தல் ராமு, புத்தூர் தர்மராஜ்,
வட்டச் செயலாளர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், தொழிற்சங்கம் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மூவேந்திரன், முரளிதரன்,மனோகரன், பரமசிவம், சுரேஷ்.காமராஜ், திருநாவுக்கரசு, வசந்தி,, மற்றும் 45 வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.