உலக சுற்றுச் குழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா உழவர் சந்தையில் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
பின்பு நிருபர்களிடம் கூறுகையில் கருப்பு பூஞ்சை தடுப்புமருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,
திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ க்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார்,
பகுதி செயலாளர்கள் கண்ணன் , காஜாமலை விஜய் , தொழிலதிபர் ஜான்சன் குமார், புத்தூர் தர்மராஜ், என்ஜீனியர் மோகன்ராஜ், தனபால் மற்றும் மாநகராட்சி, வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.