Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் தளர்வு இல்ல ஊரடங்கு . இன்றும் நாளையும் அனைத்து கடையிலும் இயங்க அனுமதி

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை காணலாம்.

*பால் விநியோகம், குடிநீர்,தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி
* மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்களுக்கு அனுமதி

*பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைகடைகள் திறக்க அனுமதி
*வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி
*காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யபப்டும்
*பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம்
*உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவுடன் அனுமதி
* உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

Leave A Reply

Your email address will not be published.