தமிழகத்தில் வரும் 24ம் தேதி முதல் ஓர் வாரத்திற்கு தொடர்புகள் அற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி இன்றும் நாளையும் தமிழகத்தில் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என்றும் பேருந்துகள் இயங்கும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வர தொடங்கினர்.
ஆனால் எந்த ஊருக்கும் செல்ல பஸ்கள் வரவில்லை 2 மணிநேரம் மேலாக காத்து இருக்கிறோம் என பொதுமக்கள் கூறினர்.
மாலை ஆறு மணி அளவில் ஒவ்வொரு பேருந்தாக மத்திய பேருந்து நிலையம் வர தொடங்கியது. அதன்பின் பொதுமக்கள் வெளியூர் செல்ல கிளம்பினர்.
முன்னதாக ஆறு மணி அளவில் மாநகராட்சி பணியாளர்கள் மத்திய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.