நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பிற்காக சுமார் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்த ரஜினி, கடந்த வாரம் சென்னை திரும்பினார்.
ஐதராபாத்தில் தங்கியிருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
மோகன்பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு தான் இந்த போட்டோஷூட்டை எடுத்துள்ளார்.
இதன் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு, ‘ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.