Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நடிகை சுருதிஹாசன்.

0

தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் சாப் படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. விஜய்சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் திரைக்கு வர தயாராக உள்ளது. தெலுங்கு, கன்னட மொழியில் தயாராகும் சலார் படத்திலும் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கில் மும்பையில் சொந்தமாக வாங்கிய வீட்டில் தங்கி இருக்கிறார். காதலர் சாந்தனு ஹரிசராவுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனாவால் உலகின் மற்ற பகுதிகளை இழக்கிறேன். இனிமேல் பயணங்களை புதிய அனுபவமாகவோ ஆரோக்கியமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.

உலகின் மீது இரக்கமும், புரிதல் தன்மையும் கொண்டு இருக்க வேண்டிய காலம் இது.

தற்போதைய சூழ்நிலையில் எல்லோரும் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கிறோம். மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும்.

போர்காலத்தில் செயல்படுவதுபோன்று செயல்பட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.