திருச்சி மலைக்கோட்டை மாநகர் பெரிய கடைவீதியில் கைலாசநாதர் கோவில் எதிரில் பரணி வெள்ளி மாளிகை பிரம்மாண்ட ஷோரூம் புதிய கிளை திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், ரோட்டரி பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும், ஷானவாஸ் மருத்துவமனை சேர்மனுமான டாக்டர் ஏ.ஜமீர் பாஷா, டாக்டர் ஏ. ஷகிலா ஜமீர் ஆகியோர் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், சின்னத்திரை நடிகைகள் ஆலியா மானசா, அனிதா சம்பத் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றினர்.விழாவில், பரணி வெள்ளி மாளிகை நிறுவனங்களின் நிறுவனர் கே.மோகனசுந்தரம்,கோத்தாரி சர்க்கரை ஆலை பொது மேலாளர் கோபி சபியுல்லா மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர் எஸ்.அம்ஜத்கான் கூறுகையில், எங்களது ஷோரூமில் பல வித விதமான வெள்ளி கொலுசுகள், நவீன டிசைன்களில் காதணிகள், வெள்ளி குத்துவிளக்குகள், வெள்ளி சொம்புகள், பாத்திரங்கள், ராசி கல் பதித்த மோதிரங்கள், மாலைகள், ஆண்களுக்கான வித விதமான கலெக்க்ஷன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழா சலுகையாக வெள்ளி பாத்திரங்கள் கிலோவிற்கு 5000 ரூபாய் தள்ளுபடியும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் பட்டுப்புடவை இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ரூபாய் ஆயிரத்துக்கு மேல் பர்ச்சேஸ் செய்யப்படும் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இரண்டாம் பரிசாக எல்இடி டிவி, மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் சிறப்பு பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.