Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம். இயூமுலீ தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் பேட்டி

0

இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும், நம் மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கு ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் வாக்கை பதிவு செய்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி

திருச்சி

இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும், நம் மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கு ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் என்று திருச்சியில் தனது வாக்கை பதிவு செய்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேட்டி

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காஜா நகரில் உள்ள காஜாமியான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 06.04.2021 செவ்வாய்க்கிழமை காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : ஊடக சகோதரர்கள் அனைவருக்கும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் துவக்கமாக எனது நன்றியையும், உளமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கீழ் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிடும் சகோதரர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியை விட்டு நான் வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் என்னை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்.

நாட்டின் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் கும்பலை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்திடுவதற்காக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தையும் இந்தத் தமிழகத்தில் ஒருங்கிணைத்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற வலிமையான கூட்டணியை அமைத்து, அதற்குத் தலைமையும் ஏற்று, சிறப்புற வழிநடத்திக் கொண்டிருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.

இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் தேச விரோத சக்திகளின் பிடியிலிருந்து இந்த நாட்டையும், நம் மாநிலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதையும், அதற்கு ஆட்சி மாற்றம் காலத்தின் கட்டாயம் என்பதையும் – தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு பரப்புரை முடியும் நாள் வரை தொடர்ந்து பரப்புரை செய்து, மக்கள் மனதில் ஆட்சிமாற்றத்தின் அவசியத்தை உணர்த்தி, அதன் தொடர்ச்சியாக இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்டுள்ள தகவல் அடிப்படையில் பார்க்கும் பொழுது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று புதிய அமைச்சரவையை அமைக்கும் என்ற நம்பிக்கை எல்லோரையும் போல எனக்கும் வலுப் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கு நம்பிக்கை வரக் காரணமாக இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நான் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

இந்த சட்டமன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்றாலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு அடையாள அட்டை – வாக்குச்சாவடி நுழைவுச் சீட்டை – பூத் ஸ்லிப்பை வழங்கும் பணி இந்த முறை சரிவர நடைபெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இதன் காரணமாக, வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் தமது இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளைக் காண்பிக்க, அதைக் கொண்டு அவர்களை அதிகாரிகள் அடையாளம் காணும் பணியில் தேவையற்ற வாக்குவாதமும், நேர விரயமும் ஏற்படுகிறது.

இது போன்ற ஒரு சில குறைகளை மட்டும் சரிசெய்துகொண்டால் தேர்தல் ஆணையத்தின் பணி என்றும் போல் மிகச் சிறப்பானதே. இனிவரும் காலங்களிலாவது கடந்த காலங்களைப் போல பூத் சிலிப் வழங்கும் விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்து, தனிக் கவனத்துடன் செயல்பட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் அது சரிவர கிடைக்கும் வகையில் செயல் திட்டத்தை அமைத்துக் கொண்டால் அது வாக்காளர்களுக்கும், வாக்குப்பதிவு உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.

பேட்டியின் போது திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான், மாநில எம்.எஸ்.எப். பொதுச் செயலாளர் அன்சர் அலி, திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் செயலாளர் ஹாஜி சையது ஹக்கீம், திருச்சி தெற்கு மாவட்ட யூத் லீக் பொருளாளர் சாதிக்குல் ஆமீன், காஜா நகர் பிரைமரி தலைவர் கே.எம்.கே. பைஜூர் ரஹ்மான், ஊடகவியலாளர் ஏம்.கே. ஷாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.