தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருச்சியில் 71.38 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
திருச்சி- 71.38
லால்குடி- 79.25
மண்ணச்சநல்லூர்- 79.63
மணப்பாறை – 75.87%
முசிறி- 76.02
ஸ்ரீரங்கம்-76.09%
திருவெறும்பூர்-66.74%
துறையூர்- 76.62%
திருச்சி கிழக்கு- 66.86%
திருச்சி மேற்கு- 67.02%