தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பெருமைப்படுத்தும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP அவர்கள் இன்று திருவெரும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை தொடர்ந்தார்
அப்போது அவர் அப்பகுதி பொதுமக்கள் இடையே பேசும்போது :
நான் வெற்றி பெற்ற பின்
1.திருவெறும்பூர் தொகுதியில் தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வந்த கிராமங்கள் அனைத்திலும் தொடர்ந்து போட்டி நடத்திட வழிவகை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.
2.எனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடு செலவுகளை நானே ஏற்பேன்.
3.மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறும் வகையில் திருவெறும்பூர் தொகுதியில் வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை சிலை அமைத்து தருவேன் என்று உறுதியளிக்கிறேன்.
என வாக்குறுதி அளித்தார்.
பிரச்சாரத்தின் போது திருவெறும்பூர் தொகுதி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.