திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியராக பணி பார்த்து வருபவர் எபினேசர் இமானுவேல் (வயது 51). இவர் இந்தப் பள்ளியின் என்.சி.சி. மாஸ்டர் ஆகவும் பணியாற்றிவருகிறார்.
இவருடைய மனைவி தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். தினமும் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு அவர் பஸ்சில் சென்று வருகிறார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தஞ்சாவூரில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து எபினேசர் இமானுவேலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சியில் உள்ள அவருடைய வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர் பணியாற்றும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர், அப்பளியில் பணியாற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பணியாளர்கள் என்று 120 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும், பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் முககவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார்..
தொடர்ந்து கொரோனாவால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் .