உலக சிறுநீரக தினமான மார்ச் 11 ஐ முன்னிட்டு திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றது.
இதில் 75 நோயாளிகள் பயன்பெற்றனர். சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர். S.கணேஷ் அரவிந்த் அவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக தொற்று, இரத்த சுத்திகரிப்பு ஆகிய சிகிச்சை முறைகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். N.கார்த்திகேயன் சிறுநீரக கல், சிறுநீரக கட்டிகள், பிராஸ்டேட் சுரப்பி வீக்கம், மூத்திரக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு(stricture), அனைத்து சிறுநீரக புற்றுநோய் கட்டிகள் ஆகியவற்றிற்கு ஆலோசனைகள் வழங்கினார்.
ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் சிறுநீரகப்பிரிவு 24 மணி நேரம் செயல்படும், நவீன கருவிகளுடன் இரத்த சுத்திகரிப்பு நிலையம், தீவிர சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (உறவினர் கொடுப்பது, கெடாவர் மூலம் பெறுவது) அனைத்து அறுவை சிகிச்சை வசதிகள், சிறுநீரக கல் அகற்ற லேசர் தெரபி,அறுவை சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தேவைப்படும் சிகிச்சை அனைத்தும் ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைக்கேற்ப செய்யப்படும்.
‘‘தரமான சிறுநீரக சிகிச்சை உங்கள் அருகில்”