மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரான வீரசக்தி இன்று அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பாடசாலை அவருக்கு கிடைப்பதைவிட உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து நண்பர்கள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டருடன் ஊர்வலமாக வந்தார் .
வழியில் உள்ள செல்வ மாரியம்மன் கோவிலில் தாயாருடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனுத் தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்தபோது அவரின் தாயாரான மரகதவள்ளி மற்றும் திருச்சி மாவட்ட கமல் நற்பணி மன்றத் தலைவர் 007 ஆகியோர் உடனிருந்தனர் .
பின்னர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமாருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது;- தி.மு.க. மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகளை விட மாற்றம் தரும் வகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் மகத்தான வெற்றி அடையும் என்று தெரிவித்தார்.
மேலும் நான் வெற்றி பெற்றால் திருச்சி கிழக்கு தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்பேன், காந்தி மார்க்கெட் விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பேன், மரக்கடையில் உள்ள மகளிர் சிறைச்சாலையை புறநகருக்கு மாற்றி அவ்விடத்தில் காய்கறி சந்தை வர ஏற்பாடு செய்வேன்,
இதே கிழக்கு தொகுதியில் சைக்கிளில் 300 ரூபாய் கூலியில் மருத்துவ விற்பனை பிரதிநிதியாக இருந்து பணியை தொடங்கி, மோட்டார் சைக்கிளில் சென்று பின்பு இன்று நான் காரில் செல்லும் அளவுக்கு என் உயர்வுக்கு காரணமாக இருந்த எனது தாயாரையும் இன்று மனு தாக்கலுக்கு அழைத்து வந்தேன்.
நான் மக்களுக்காக என்றும் உழைப்பேன் என்பதை உணர்த்துவதற்காகவும் என் உடல் உயிர் அனைத்தும் மக்களுக்கு தான் என்பதை விளக்கும் வகையிலும் மனுத்தாக்கல் செய்ய வருவதற்கு முன்பு ஆன்லைனில் உடல் உறுப்பு தானம் செய்து விட்டு தான் வருகிறேன் என
கிழக்குத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி உருக்கமுடன் பேட்டி அளித்தார்.