ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் ஜவஹர்லால் நேரு வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழாவையொட்டி
தில்லைநகரில் உள்ள கார்த்திக் சித்த வைத்தியசாலா முன்பு மாவட்ட அதிமுக மகளிரணி, மருத்துவரணி சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழரசி, மருத்துவரணி தலைவர் டாக்டர் சுப்பையா தலைமையில் இலவச சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள், அன்னதானத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், தாயார் சீனிவாசன், இலியாஸ்,
டாக்டர்கள் ஜான். ராஜ்குமார்,முனியசாமி, உறையூர் வசந்தி, மகேஸ்வரி,மகாலட்சுமி, செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.