ஸ்ரீரங்கம் முசிறி மண்ணச்சநல்லூர் தொகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட பரஞ்சோதி விருப்பமனு.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதையடுத்து அதிமுக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனு பெற்று வருகின்றனர்.
அதிமுக சார்பில் விருப்ப மனு ஜெயலலிதா பிறந்த தினமான இன்று தொடங்கியது.
இதையடுத்து அதிமுகவினர் போட்டிபோட்டுக்கொண்டு தலைமை கழகத்தில் விருப்பமனு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தன்னுடைய ஏற்பாட்டில் இன்று தலைமை கழகத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
பரஞ்ஜோதி அளித்த விருப்ப மனு, அதற்கான ரசீது சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.