தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வரதன் தலைமை தாங்கினார். பிரபாகரன்,முருகேசன், மயில்வாகனன், முத்துக்கருப்பன், பழனிச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொமுச பொதுச் செயலாளர் குணசேகரன், தலைவர் அழகேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016 முதல் 119 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது வரை உயர்ந்துள்ள 174 சதவீத அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும்,அறுபத்தி இரண்டு மாதகால அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில் கணக்கிட்டு அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .