Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாணவர்களுக்கு வாழையில் தொழில்முனைவோர் பயிற்சி

0

திருச்சியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் தோட்டக்கலை மாணவர்களுக்கு வாழையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில் முனைவோர் பயிற்சி.

 

மகளிர் தோட்டக் கலைக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருச்சிராப்பள்ளி மற்றும் கேபி எண்டர்பிரைசஸ் என்ற வாழைக்கான தொழில் நிறுவனமும் இணைந்து தேசிய வேளாண்மை உயர் கல்வி கொள்கை திட்டத்தின் நிதி உதவியுடன்

இறுதி ஆண்டு இளம் அறிவியல் தோட்டக்கலை மாணவிகளுக்காக வாழையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பிற்கான தொழில்முனைவோர் பயிற்சி பிப்ரவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் திருச்சியில் உள்ள கேபி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியுடன் தொடக்க விழாவை மகளிர் தோட்டக்கலை கல்லூரி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் பரமகுரு குத்துவிளக்கேற்றி, தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து பேராசிரியர் மற்றும் தலைவர் பழதுறை லட்சுமணன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் சிவகுமார் எண்டர்பிரைசஸ் உரிமையாளரால் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இரண்டு நாட்களுக்கான பயிற்சியில் வாழையின் மருத்துவ குணம் கொண்ட சிறப்பு தயாரிப்புகளான வாழைப்பூ, வாழைப்பழ ஜாம், குழந்தைகளுக்கான மாவு மற்றும் இயந்திரம் மூலமாக வாழைநார் எடுக்கும் பயிற்சி முறையும் அதிலிருந்து செய்யப்படும் மதிப்பூட்டப்பட்ட கைவினை பொருட்கள் செய்யும் முறையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிக்கான முழு ஏற்பாடுகளையும் இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி இணைப்பேராசிரியர் (தோட்டக்கலைத்துறை), முனைவர் சாமிநாதன், இணைப்பேராசிரியர் (பூச்சியியல் துறை) மற்றும் முனைவர் சா?ந்தி உதவி பேராசிரியர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.