தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன் என்பவர் இஸ்லாமியர்கள் உயிருக்கும் மேலாக நினைக்கும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசியுள்ளார்,
மேலும் அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை மத பிரச்சினையை தூண்டி இருக்கிறார் ஆகவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நலன் கருதி அவரை தேசிய . பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் பஹதூர்ஷா, மாநில அமைப்பாளர் இத்ரீஸ் கபந்தர், ஜூபேர், சஜ்ஜாத் உசேன், மாவட்ட தலைவர் சைய்யது உசேன், மாவட்ட செயலாளர் சையது அபுதாஹிர், அமைப்பாளர் ரபீக், இளைஞானி நூர் அஹ்மத், மாவட்ட துணைத் தலைவர் அப்பாக்குட்டி, பொதுச் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் உடனிருந்தனர்