Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 16.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 16.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

புதிய பொருட்கள் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். சுபகாரியம் உண்டாகும். உத்யோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற கூடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வழியில் நல்ல செய்தி இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உத்யோகத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் இருக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வரவைக் காட்டிலும் செலவு இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும்.கூட்டாளி களின் உதவியால் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்ற நிலையிருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தை சாதக பலனை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற மனஸ்தாபம் இருக்கும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சிறு பாதிப்பு இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொருளாதார நிலை சீராக இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை இருக்கும். உறவினர் ஆதரவாக இருப்பார்கள்.எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சி இருக்கும். வீட்டில் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளால் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்யோக ரீதியில் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் சந்திக்க வேண்டியிருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறு இருக்கும். விட்டு கொடுத்து செல்வது நல்லது.புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தெய்வ வழிபாடு நல்லதை தரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி காலதாமதம் உண்டாகும்.நெருங்கியவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்புகள் உயரும்.

மகரம்

உங்கள் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும் கூடும். எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பலன்கள் குறையும். உறவினர் வழியாக உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும்.உறவினர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து வாய்ப்புகள் உருவாகும். வீட்டில் பெண்களுக்கு வேலைப் பளு நீங்கும். புதிய பொருட்கள் சேரும். சுபகாரியம் உண்டாகும். வியாபாரம் சீராக இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு திட்டமிட்ட காரியம் நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். சுபகாரியம் இழுபறி நிலையில் இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.