திருவள்ளூர்: திருவள்ளூர் – பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் புட்லூர் செல்லும் சாலை அருகே திருவள்ளூரை சேர்ந்த மேற்கு திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேஜிஆர்.ராஜேஷ். இவர் கௌதமன், வெங்கடேசன், டிரைவர் சாதிக் பாஷா ஆகியோருடன் சென்னை நோக்கி காரில் பயணித்து கொண்டிருந்தார்.
காரை டிரைவர் சாதிக்பாஷா ஓட்டிச் சென்றார். அப்போது புட்லூர் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லாரி தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும்போது கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரின் முன்பக்கம் பம்பர் இல்லாததால், டிப்பர் லாரி மீது கார் மோதியதில் கார் முன்பக்கம் உருக்குலைந்து சேதம் அடைந்தது. காரின் முன்பக்க பம்பர் இல்லாததால் உடனடியாக காருக்குள் இருந்த ஆறு பலூன்களும் விரிந்ததால் காருக்குள் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் பின்னால் இருந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் என்பவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக திருவள்ளூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கார் டிரைவர் சாதிக் பாஷா லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கார்களில் உள்ள பம்பர்களை எடுத்துவிட வேண்டும் என்று தமிழக அரசு விதித்த விதி முறையை கடைபிடித்ததால் தற்போது ஏற்பட்ட விபத்தில் காருக்குள் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்தை ஏற்படுத்தி தப்யோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை மணவாளநகர் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.