Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 01.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 01.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் செலவு கட்டுக்கு அடங்கி இருக்கும்.

உற்றார் உறவினர் வழியில் அனுகூலம் உண்டாகும். வண்டி வாகனங்களுக்கு சிறு தொகையை செலவிட கூடும்.தொழிலில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் பொறுப்புடன் இருப்பார்கள். எதிலும் நிதானம் அவசியம்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். சுப காரியங்களில் சாதகமான பலன் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு செலவுகள் அதிகமாகும்.உற்றார் உறவினர் அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் தேவை அறிந்து உதவக்கூடும்.உத்தியோகத்தில் பொறுப்பாக நடந்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். லாபத்தை அடைய முடியும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். வீட்டில் புத்திர வழியில் சுப செலவுகள் இருக்கும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும். வருமானம் பெருகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக அமையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் நினைத்த காரியம் நடக்கும். தொழிலில் புதிய யுக்தி களால் முன்னேற்றம் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தெய்வ வழிபாடு நல்லதைக் கொடுக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு இனிய செய்தி வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பணப்பிரச்சனை அனைத்தும் நீங்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி நடக்கும். சுபகாரியங்களில் அனுகூல பலன் இருக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளுடன் செயல்பட்டு ஒற்றுமையாக இருப்பீர்கள். லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். குழந்தைகள் விருப்பம் நிறைவேறும். சேமிப்புகள் உயரக்கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது தரும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் அனுகூல பலன் இருக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகளில் கூட்டாளிகள் உதவி நல்ல பலனைக் கொடுக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை இருக்கும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லதே தரும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்க வேண்டும் அதுவே நல்லது.தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நிம்மதியை கொடுக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கள நிகழ்வுகள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூல பலன் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். புதிய வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க கூடும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். பெரிய மனிதர்களின் அனுகூலம் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு சுப செலவுகள் செய்யக்கூடும்.வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் தீரும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். மனைவிவழி உறவினர்கள் உதவி உண்டாகும். நெருக்கடிகள் அனைத்தும் நீங்கும்.

Leave A Reply

Your email address will not be published.