Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டி :அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி.

0

'- Advertisement -

சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொது செயலாளர் பேட்டி.

Ad banner


எதிர்வரும் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நவமணி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச் செயலாளர் மகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“மறைந்த முதலமைச்சர் அண்ணாவுக்கு சபாநாயகராக செயல்பட்டு பதவி பிரமாணம் செய்து வைத்த மூக்கையாவுக்கு சட்டப்பேரவையில் படம் வைக்க வேண்டும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தியாகி ரத்தினவேல் தேவர் பெயர் சூட்ட வேண்டும். திருச்சி விமான நிலையத்துக்கு மாமன்னர் ராஜ ராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும். அதேபோல் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவ வேண்டும்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் (ஏ.ஐ.எஃப்.பி) பசும்பொன் கட்சி பொதுக்குழு கூட்டம்
நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜனவரி 23, 24 ஆகிய இரு தேதிகளில் அரசியல் எழுச்சி மாநாடு தேனியில் நடத்த இருக்கிறோம். அதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணியில் கேட்டுப்பெறப்பட வேண்டுமென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்றார்.

இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் காசிராஜன், மாநில செயலாளர் காசி மாயத்தேவர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.