மீண்டும் குக்கர் சின்னம் : திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பாபா சின்னம் அல்லது ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செய்திருந்தார்.
தற்போது சிறிய சிறிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் போது சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்று மாபெரும் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது சின்னமாக பிரஷர் குக்கர் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கியது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது சின்னமான பிரஷர் குக்கரில் போட்டியிட உள்ளது.
வெற்றி சின்னமான பிரஷர் குக்கர் சின்னம் மீண்டும் தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் தலைமையில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகம் அருகில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் தமிழகம் முழுவதுமுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.