திருச்சி
உக்கிர காளியம்மன் கோவில் அருகில் நேற்று 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாள் கத்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கறிஞர் சந்தர் (எ) சந்திரன் வழக்கில்
புண்ணியமூர்த்தி (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார்
மேலும் வழக்கில் தொடர்புடைய தனபால் உள்ளிட்ட 3 பேரை கைது போலீசார் தேடி வருகின்றநிலயில்
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் சந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், முத்தரையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வைர வேல், மாநில துணைத் தலைவர் சம்பத் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மண்டல பொறுப்பாளர் குணா,திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ரவி, செய்தி தொடர்பாளர் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.