Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைம் முலம் நடத்தலாம். அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைம் முலம் நடத்தலாம். அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

0

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை.
அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சில தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தின. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் நடக்க இருந்த அரையாண்டுதேர்வு களையும் ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்றும் அதற்கு ஆட்சேபம் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் 50 சதவீதமாக குறைப்பு மட்டுமன்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்க வேண்டும்.

அரசு சரியாக செயல்படாததால் பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.