குமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. பல மாதங்களாக பூட்டி கிடந்த படந்தாலுமூடு சோதனைச்சாவடி,பணி முடிந்தும் திறக்காமல் இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்த சோதனைச் சாவடிக்கு பணியில் அமர போலீசார் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. காரணம் அந்த அளவிற்கு இந்த சோதனைச் சாவடியில் பணம் வசூல் ஆகிறது. இருசக்கர வாகனம்,மணல் லாரி,வைக்கோல் ஏற்றி செல்லும் லாரிகள்,மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் என ஒன்றும் விடாமல் விரட்டிப் பிடித்து பணம் வசூல் செய்கின்றனர். உள்ளூர் போலீசாரே இந்த சோதனை சாவடியில் பணியில் இருப்பதால் அதிக அளவு வசூல் வேட்டை நடப்பதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் படந்தாலு மூடு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு டி எஸ் பி மதியழகன் தலைமையில் நடந்த ஆய்வில் 20 ஆயிரத்து 800 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது . களியக்காவிளை சோதனை சாவடியில் நடந்த ஆய்வின் 64 ஆயிரத்து 140 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் மீது களியக்காவிளை போலீஸ் வழக்கு .