Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கே.என்.நேரு தலைமையில் சாலை மறியல்.

திருச்சியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கே.என்.நேரு தலைமையில் சாலை மறியல்.

0

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக முதன்மைச் செயலாளர் நேரு தலைமையில்
திருச்சி ஜங்சன் பேருந்து நிலையம் எதிரே திமுகவினர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் திட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற ஒன்றுபட்ட விவசாயிகள் முன்னணியின் கீழ்
டெல்லியில் தொடர்ந்து பதின்மூன்றாம் நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தமிழகம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று ஒன்றிணைந்து தமிழகம் தழுவிய பந்த் நடத்துகின்றனர்.

ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே திமுக, மதிமுக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த . 200க்கும் மேற்பட்டோர் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு மத்திய அரசை கண்டித்தும் புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கே.என். நேரு தவிர 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.என்.நேரு
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
தான் விவசாயி என கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
புதிய வேளாண் சட்டங்களை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே வேளாண் சட்டங்களை வரவேற்கிறார் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,
மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, தொ.மு.ச.குணசேகரன், பி.ஆர்.சிங்காரம், விவசாய அணி மூக்கன், ஜெயக்குமார், புத்தூர் தர்மராஜ், பவுல்ராஜ், பந்தல் ராமு, பி.ஆர்.பாலசுப்பிரமணியன்,
காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவகர், திருச்சி கலைச்செல்வன், முன்னாள் மேயர் சுஜாதா, ரெக்ஸ், ஜெகதீஸ்வரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி மற்றும் தோழமை கட்சிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்

Leave A Reply

Your email address will not be published.