1)திருச்சி பஞ்சப்பூரில்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கொத்தனார் பலி.
திருச்சி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 43) கொத்தனார் இவர் நேற்று வேலை முடிந்து சென்னை மதுரை பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் ஓலையூர் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாலசுப்பிரமணியன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2) திருவரங்கத்தில் பரிதாபம் :
இளம்பெண் தீக்குளித்து சாவு.
திருவரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ரமணி இவரது மனைவி சுதா திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது உடல்நலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் மன உளைச்சலில் இருந்தார் இந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக இறந்தார் இதேபோல் திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் வீட்டு கூரை உத்திரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் திருவரங்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
3) திருச்சியில் விஷமருந்தி முதியவர் தற்கொலை
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 79) இவருக்கு சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி உயிருக்கு போராடியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.