மு.பரஞ்ஜோதி தலைமையில், வளர்மதி முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
மு.பரஞ்ஜோதி தலைமையில், வளர்மதி முன்னிலையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அமைச்சர் வளர்மதி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது,புதிய வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், அழகேசன், நடராஜன்,செல்வராஜ், சிறுகமணி பேரூராட்சி செயலாளர் செந்தில், பாசறை மாவட்ட செயலாளர் விவேக், கலைப்பிரிவு அன்னை கோபால், உள்பட தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்