
திருச்சியில் நாளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கும் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற உள்ளது ..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பில் புகை, மது, போதை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி அளவில் நடைபெற உள்ளது …. திருச்சி ஜமால் முகமது கல்லூரி (டிவிஎஸ் டோல்கேட் ) அருகில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் தொடங்கி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் முடிவு பெறுகிறது .. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு நிறைவு செய்யும் 150 நபர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . . .
இந்த மாரத்தான் போட்டியில் இளைஞர்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் .

