Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நோய் பரவும் முன் நடவடிக்கை எடுப்பார்களா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் எ.புதூர், ராமச்சந்திரா நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நோய் பரவும் முன் நடவடிக்கை எடுப்பார்களா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் எ.புதூர், ராமச்சந்திரா நகர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

0

'- Advertisement -

எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி
எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி
எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி

 

 

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் மூலம் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது வரை ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமச்சந்திரா நகர் ஹெல்த் காலனி

 

Suresh
ராமச்சந்திரா நகர் ஹெல்த் காலனி
ராமச்சந்திரன் நகர் செட்டியப்பட்டி கிருஷ்ணவேணி நகர்

பனி மற்றும் மழை நேரங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், திருச்சியில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக 20 கீழ் என குறைந்தது .
திருச்சியில் நேற்று வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36 என உயர்ந்துள்ளது. இதற்கு தொடர் மழை தான் காரணமா என தெரியவில்லை.

ஆனால் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனி, ராமச்சந்திரா நகரில் உள்ள கிருஷ்ணவேணி நகர், ஹெல்த் காலனி போன்ற குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். நேற்று இரவு முழுவதும் பொய்து வந்த மழை தொடர்ந்து இன்றும் மழை பெய்தால் தங்களது வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்ள வீடுகளில் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இப்பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ஒரு உடனடியாக அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.