இன்றைய ராசிப்பலன் – 05.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.உற்றார் உறவினர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடு உண்டாகும்.
அலட்சியத்தால் பிரச்சினைகள் இருக்கும். வீட்டில் ஆதரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு மன மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். பண விஷயங்களில் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பணவரவு சுமாராக இருந்தாலும் தேவை பூர்த்தியாகும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் தீரும். நண்பர்கள் உதவுவார்கள்.
கடகம்
உங்களின் ராசிக்கு சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியங்களில் முயற்சிகள் இருக்கும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் சாதகமாக இருப்பார்கள். உத்யோகத்தில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வரவும் செலவும் சமமாக அமையும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் உடனிருப்பவர்களின் உதவி நல்ல பலனைக் கொடுக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் அமையும்.
கன்னி
உங்களின் ராசிக்கு செய்யும் தொழிலில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.உற்றார் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். தொழில் புதிய யுக்தியை பயன்படுத்தி லாபம் பெறுவீர்.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர் வழியில் நல்ல செய்தி உண்டாகும். தொழிலில் இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி பெருகும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். தொழிலில் வியாபாரம் சீராக இருக்கும். கடன் தொல்லை தீரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சோர்வு சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். உடல்நிலையில் கவனம் வேண்டும். குழந்தைகளுக்கு தேவை இல்லாத வீண் செலவு உண்டாகும். தொழிலில் மேலதகாரிகளிடம்நிதானமாக நடந்து கொண்டால் வீண் பிரச்சனையை தவிர்க்க முடியும்.
தனுசு
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வாகனங்களில் எச்சரிக்கையாக செல்வது நல்லது.மற்றவர் பிரச்சினையில் தலையிடாமல் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் கவனம் அவசியம்.
மகரம்
உங்களின் தரிசிக்க மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். சிவ காரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு சுப செலவுகள் இருக்கும். சகோதர சகோதரி ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பாராத ஊதிய உயர்வு உண்டாகும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு பிறகு வெற்றி உண்டாகும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பில்லாமல் இருப்பீர்கள். சுப காரியங்களில் தாமத நிலை இருக்கும். குழந்தைகளுடன் சிறு கருத்து வேறுபாடு அமையும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளுக்கு பின் நல்ல பலன் உண்டாகும். உத்யோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.