Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கண்டுகொள்ளாத வியாபார சங்கம். சாதித்த மளிகை மண்டி வியாபாரிகள்.

கண்டுகொள்ளாத வியாபார சங்கம். சாதித்த மளிகை மண்டி வியாபாரிகள்.

0

சத்தமில்லாமேல் சாதித்த காந்தி மார்கெட் மளிகை மண்டி, கயிறு, வெள்ளக்கடை வியாபாரிகள்.

கொரோனா பேரிடரால் காந்தி மார்கெட் மூடப்பட்டதால் உண்மையிலேயே பெரிதாக பாதிக்கப்பட்டவர்கள் காந்தி மார்கெட் உள்பகுதியில் உள்ள மளிகை மண்டி வியாபாரிகள் தான்.

ஏனென்றால் காய்கறி, பூக்கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கிய திருச்சி மாவட்ட நிர்வாகம். இந்த மளிகை கடை வியாபாரிகளை கண்டுகொள்ளவே இல்லை.

ஊரெல்லாம் மளிகை கடைகள் கலைகட்டியிருந்த நேரத்தில். காந்தி மார்கெட்டிலுள்ள மளிகை கடைகளிலுள்ள பொருட்களில் புழு, பூச்சு வைத்தது தான் மிச்சம். இதனை பல மனுக்களாக மளிகை கடை வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் சுட்டிகாட்டியும் நோ யூஸ்.

மேலும் காந்தி மார்கெட்டில் காய்கறி, பூக்கடை மட்டுமே உள்ளது என மாயதோற்றம் ஏற்படுத்தப்பட்டது. காந்தி மார்கெட்டில் மளிகை கடை, வெள்ளக்கடை, கயிறு கடைகள், பேன்சி ஜாமான் விற்பனை கடை உள்ளதை திட்டமிட்டு மறைக்கப்பட்டன.

மேலும் கள்ளிக்குடி புது மார்கெட்டில் இந்த மளிகை கடை, கயிறு, வெள்ளம் உள்ளிட்ட கடை உரிமையாளர்களுக்கு ஒரு கடை கூட ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதனை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டிய எந்த பிரதான வியாபார சங்கமும் சொல்லவில்லை.

இதனால் வெகுண்டெழுந்த மளிகை கடை, கயிறு, வெள்ளக்கடை உரிமையாளர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தங்களது மேற்படி நியாயத்தை குறிப்பிட்டும் லத்தீப் கேட், மெயின் கேட் உள்ளிட்ட இரண்டு கேட் திறந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டி

MP(MD):-16398/2020 என்ற ரிட் மனுவை மளிகை மண்டி தலைவர் பாலசுப்ரமணி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறான தொடர்ந்து காந்தி மார்கெட் விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் வரிசை கட்டியதால் மாவட்ட நிர்வாகம் சில உண்மைகளை தெரிந்து கொண்டதால் சாதகமான தீர்ப்பு தற்பொழுது பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு சத்தமில்லாமல் எவ்வித விளம்பரமும் இல்லாமல் காந்திமார்கெட்டை திறக்க காந்தி வழியில் செயல்பட்ட காந்திமார்கெட் மளிகை, கயிறு, வெள்ள கடை சங்க நிர்வாகிகளை பாராட்டுக்கள்.

Leave A Reply

Your email address will not be published.