Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள்…..

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள்.....

0

1).
திருச்சி தென்னூரில் துணிகரம்.

கத்திமுனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு 5 பேர் கைது.

திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் இவரது மகன் தனபால் ( வயது 35) இவர் தனது நண்பர் ஒருவருடன் தெருவிலுள்ள பள்ளி அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கத்திமுனையில் இவரிடம் மிரட்டி பணத்தை பறித்து சென்றனர் இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிந்து இதுதொடர்பாக சின்னத்தம்பி, அஜித்குமார், நாகேந்திரன், மணிகண்டன், பாலாஜி ஆகிய 5 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து பணமும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

2).
திருச்சியில் விபத்து.
நடந்து சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

திருச்சி அரியமங்கலம் உக்கடை ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 69) இவர் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் ஜெகநாதபுரம் பிரிவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3).
திருச்சியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4).
திருச்சியில்
லாட்டரி கஞ்சா விற்றவர்கள் கைது

திருச்சி மாநகரில் லாட்டரி கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் கன்டோன்மென்ட், ஏ.புதூர், பாலக்கரை, திருவரங்கம், ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் லாட்டரி விட்டதாக நாலு பேரும் கஞ்சா விற்றதாக ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா, பணம், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

5).
திருச்சி கே கே நகரில் கல்லூரி மாணவி திடீர் மாயம் .

திருச்சி கே கே நகர் தங்கையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இவரது மகள் இமையாள் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் வீட்டில் வேலை செய்யாததால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார் பின்னர் வீடு திரும்பவில்லை இதுகுறித்த புகாரின் பெயரில் கேகே நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.