கோவிலுக்குள் சிறுவன் தற்கொலை. செல்போன் விளையாட்டால் விபரீதம்.
கோவிலுக்குள் சிறுவன் தற்கொலை. செல்போன் விளையாட்டால் விபரீதம்.
செல்போன் விளையாட்டால் நடந்த விபரீதம்.
திருச்சியில் செல்போன் விளையாட்டால் வந்த விபரீதத்தில் சிறுவன் கோவிலுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையைச் சேர்ந்தவர் மணி இவர் மும்பை மாநகராட்சியில் ஊழியராக பணிபுரிந்து இறந்துவிட்டார் இவரது மனைவி அழகு இவர்களது மகன் ராதாகிருஷ்ணன் (வயது 18) ராதாகிருஷ்ணனின் சித்தப்பா பரமசிவம் என்பவரது மகள் திருமணத்திற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது தாயார் அழகு என்பவருடன் திருச்சிக்கு வந்துள்ளார் திருச்சியில் ராதாகிருஷ்ணனின் சித்தப்பா வீடு EB ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் உள்ளது.அங்கு தனது தாயுடன் தங்கி வந்துள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு செல்போனில் எப்போதும் கேம் விளையாடுவது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் அதிக அளவில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியுடன் காணப்பட்டுள்ளார்
உடனே இவரை தர்கா கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று அவரது குடும்பத்தினர் மந்திரித்து அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறிய ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சியில் இன்று அதிகாலையில் கோவிலில் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அப்பகுதி பொதுமக்கள் இடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது