மகேஷ் பொய்யாமொழி வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
மகேஷ் பொய்யாமொழி வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோர்ட்டு அருகில் உள்ள வர் உ. சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போல்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என் சேகரன், கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், கொட்டப்பட்டு தர்மராஜ், மலைக்கோட்டை மதிவாணன் நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் ஒன்றிய, நகர,பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்