ஜோதிடர்களால் விஜய், எஸ்.ஏ.சி இடையே மோதல். விஜய் மக்கள் இயக்கத்தினர் தகவல்
ஜோதிடர்களால் விஜய், எஸ்.ஏ.சி இடையே மோதல். விஜய் மக்கள் இயக்கத்தினர் தகவல்
நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இடையே ஜோதிடர்களால் மோதல் உருவானதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் கூறுகின்றனர்.விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூறியதாவது :நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஜோதிடம் வாஸ்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். சமீபத்தில் விஜய் நண்பர்கள் சிலர் டில்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவரிடம் விஜய் ஜாதகத்தை காண்பித்துள்ளனர்.’குருபெயர்ச்சிக்கு பின் ஆறு மாதங்களில் தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்கும் விபரீத ராஜயோகம் உள்ளது. இந்த அதிசயம் நடக்கும்’ என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.இதையறிந்த எஸ்.ஏ.சந்திரசேகர் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்க திட்டமிட்டு தேர்தல் கமிஷனில் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார்.அடுத்ததாக கட்சியின் பெயர் கொடியின் நிறம் கட்சி துவக்குவதற்கான தேதியை குறித்து தரும்படி கோரி விஜய்க்கு நெருக்கமான கடலுார் மாவட்ட ஜோதிடரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்தனர்.அந்த ஜோதிடரோ ‘தற்போது விஜய் அரசியலில் குதிக்க வேண்டாம்.
அவருடைய பூசம் நட்சத்திரத்தால் பணம் உழைப்பு எல்லாம் விரயமாகி விடும்’ என கூறியுள்ளார்.இதையடுத்து ‘என் பெயரில் கட்சி துவக்க வேண்டாம். 2026ல் சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்’ என தந்தையிடம் விஜய் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பிடிவாதமாக இருந்து மகனின் பேச்சை மீறி கட்சிக்கான அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார்.தந்தை – மகன் இருவருக்கும் இடையே ஜோதிடர்களால் மோதல் உருவாகி திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.