எழுத்துப்பிழையுடன் H.ராஜா ட்வீட், கலாய்க்கும் நெட்டிசன்கள்.
எழுத்துப்பிழையுடன் H.ராஜா ட்வீட், கலாய்க்கும் நெட்டிசன்கள்.
எழுத்துப் பிழையுடன் ட்வீட் போட்ட ஹெச்.ராஜா,கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழில் எழுத்துப் பிழையுடன் ட்வீட் பதிவு செய்ததை அடுத்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரிக்கவில்லை என்று நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் பால் அறிக்கை. ஆனால் அது இங்கு சிலர் செவிக்கு எட்டவில்லை போலும். நியூட்டன் 3 வது விதியை நினைவுறுத்துகிறோம், என்று ட்வீட் போட்ட ஹெச்.ராஜா, பண்டிகை என்பதற்கு பதிலாக பண்டகை என பதிவிட்டிருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை டேக் செய்து தொடர்ந்து கமெண்ட் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து பண்டிகை என மாற்றி புதிதாக ட்வீட் போடப்பட்டது. எழுத்துப் பிழை இருந்த ட்வீட் பின்னர் நீக்கப்பட்டது.