திருச்சி அருகே அனுமதியின்றி முத்தரையர் சிலை, முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை
திருச்சி அருகே அனுமதியின்றி முத்தரையர் சிலை, முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை
திருப்பட்டூரில் அனுமதியின்றி முத்தரையர் சிலை
சிறுகனுார் போலீஸ் விசாரணை.
மண்ணச்சநல்லுார் அருகே, அனுமதியின்றி முத்தரையர் சிலை வைக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, திருப்பட்டூர் ஊராட்சியில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
பிரம்ம தேவனுக்கு தனி சன்னதி உள்ளதால், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இது தவிர, இந்த ஊராட்சியில், பட்டியல் இன மக்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு அருகே, அய்யனார் கோவில் மற்றும் திருப்பட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகம், பஸ் ஸ்டாப் ஆகியவை உள்ளது.
இந்த இடத்தில், திடீரென அனுமதி இல்லாமல், பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்தும், கொடி கம்பமும் நடப்பட்டிருந்தது.
அனுமதியின்றி குறிப்பிட்ட சமுதாயத்தினர், பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைத்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதற்கு, பிற சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டம்– ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.
தகவல் அறிந்த மண்ணச்சநல்லுார் தாசில்தார் முருகேசன், சிறுகனுார் போலீசாருடன் சென்று விசாரணை செய்தார்.
திருப்பட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஏற்பாடு செய்து, பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வைத்திருப்பதாக, பொதுமக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்ட சிலையை, வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் மூடி வைத்துள்ளனர். பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களை, சிறுகனுார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.