Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளொன்றுக்கு 1,250 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்க எல்பிஜி சிலிண்டர் சங்கத்தினர் வேண்டுகோள்.

நாளொன்றுக்கு 1,250 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்க எல்பிஜி சிலிண்டர் சங்கத்தினர் வேண்டுகோள்.

0

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் மாநில தலைவர் கணேஷ் கூறும்போது, தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் சிலிண்டர் டெலிவரி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 250 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். மேலும் பிஎஃப், இஎஸ்ஐ, பென்சன் ஆகியவற்றுக்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஏஜென்சியின் உரிமைகள் ரத்து செய்யப்பட வேண்டும். எங்களின் கோரிக்கையை ஏற்று ஓடிபி நம்பர் காட்டும் முறையினை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்கு அரசுக்கு நன்றி கூறுகின்றோம். தேனியில் திடீரென நிறுத்தப்பட்ட சிலிண்டர் டெலிவரி தொழிலாளி முத்து கருப்பையா மனஉளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி 23ஆம் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செய்தி தொடர்பாளர் ஹேமநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.