ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரத்தநாட்டில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரத்தநாடு பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்தாய்வு கூட்டம் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
முதல் தீர்மானமாக அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் அரசு வழங்கவேண்டிய நிதி வராததால் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது எனவே கணக்கு எண் ஒன்றின் படி 2 லட்சம் நிதியை விடுவிக்க வேண்டுமெனவும் , மத்திய அரசு கொண்டு வந்த
அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும்,
14 ,15வது நிதிக்குழு மானிய தொகையை ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கு தெரியாமல் எடுக்க கூடாது எனவும்,
மேலும் கொரோனா காலங்கல்மற்றும் பண்டிகை காலம் வருவதால் உடனடியாக அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் உரிய தொகையை செலுத்த கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.