கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் முப்பெரும் விழா, திருச்சியில் நடைபெற்றது.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் முப்பெரும் விழா, திருச்சியில் நடைபெற்றது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் முப்பெரும் விழா
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக 11ஆம் ஆண்டு தொடக்கவிழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்களை கௌரவிக்கும் விழா என் முப்பெரும் விழா மாவட்ட அவைத் தலைவர் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் வரவேற்புரையும், ஆண்டறிக்கையை கிழக்கு தொகுதி மகளிரணி துணை செயலர் ஹெலன் கிறிஸ்டினா இணைந்து வாசித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு
ஞானப்பிரகாசம், அமிர்தராஜ்,
டாக்டர் ஏனோக் மதுரம் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்துரையை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சேர்ந்த இந்திரஜித், ஹபிபுர் ரஹ்மான், சுரேஷ், பேட்ரிக் ராஜ்குமார் மற்றும் அருள்தந்தை C.ரமேஷ், திருச்சி அருள்தந்தை ஜோசப், ஆரோக்கிய பன்னீர்செல்வம்,
அருள்சகோதரி அடைக்கல வெர்ஜின், இருதய தெரஸ், மரியின் ஊழியர் சபை சவரிராஜ், பாஸ்டர் பால் ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். மேலும் கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்களான
ரெங்கசாமி, லாரன்ஸ் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். மேலும் நலத்திட்ட உதவிகளை சபாரத்தினம், ஜெஸ்டின், சில்வெஸ்டர், விஜய்சாமுவேல்,
சாம்ராஜ், அந்தோணி சாமி, மேரிசந்திரா, பாத்திமா ஆகியோர் வழங்கினார்கள். மேலும் இவ்விழாவில் மா.துணை செயலர்கள் லூயிஸ்,
ஜெயசீலன், தொகுதி செயலர்கள் கனகராஜ், ஜேம்ஸ், திமுக பகுதி செயலாளர்கள் கண்னன், மண்டி சேகர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில்
மாவட்ட செய்தி தொடர்பாளர் தன்ராஜ் நன்றி கூறினார்.