இன்றைய ராசிப்பலன் – 27.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு புதுப்பொலிவுடன் இருப்பீர்கள்.
நண்பர்களின் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் அனுகூலம் உண்டாகும். தொழிலில் வெளியூர் செல்ல பயணம் உருவாகும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் ஒற்றுமை கூடும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சிறப்பான லாபம் உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களால் விரயங்கள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தடை தாமதம் ஏற்படும். என் செலவும் உண்டாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பேச்சு ஆளாவீர்கள். முகம் தெரியாதவர்களிடம் அதிகம் பேசாதீர்கள் அதுவே நல்லது. எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு திறமை வெளிப்படும் நாள்.கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் தீர்ந்து சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். தொழிலில் உயர் அதிகாரிகளின் பாராட்டு பொங்கும். கடன்கள் நீங்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை இருக்கும். தொழிலில் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் உண்டாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் அனுகூலம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.
துலாம்
உங்களின் ராசிக்கு தொழிலில் ஆர்வம் குறைந்து இருக்கும். தொழில் ரீதியில் நெருக்கடி உண்டாகும்.உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் நீங்கும். எந்த முயற்சி எடுத்தாலும் வீட்டின் ஆதரவு இருக்கும். வெளி பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டிலுள்ள உரங்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வரும். உத்தியோகத்தில் உத்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர். நண்பர்களின் ஒத்துழைப்பில் பொருளாதார பிரச்சனை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும்.குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோக ரீதியில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
மகரம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்க ஆர்வம் கூடும். தொழிலில் முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் உண்டாகும். சேமிப்புகள் உயரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழில் ரீதியில் அலைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்தால் லாபம் உண்டாகும். கடன்கள் தீரும்.